ஏப்.1-ல் இருந்து ஆந்திராவில் 4ஜி சேவை

By செய்திப்பிரிவு

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதியிலிருந்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4ஜி செல்போன் சேவை தொடங்கப்பட உள்ளதாக மாநில அரசு நேற்று அறிவித்தது.

ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று முன்தினம் சந்தித்த ரிலையன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் ரகுராஜு, ராஜீவ் லுத்ரா ஆகியோர் ரிலையன்ஸ் செல்போன் சேவை களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். மாநிலத்தில் உள்ள 502 ரிலையன்ஸ் செல்போன் டவர்களில் 4ஜி தொழில்நுட்ப உபகரணங்களை அமைப்பதின் மூலம் மாநிலம் முழுவதும் விரைவாக இன்டர்நெட் சேவைகளை வழங்க இயலும் என தெரிவித்தனர். இதற்கு ஆந்திர அரசின் அனுமதியை கோரினர். அதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒப்புதல் அளித்தார். அதற்கான உத்தரவை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆந்திர அரசு நேற்று வழங்கியது.

முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஆந்திராவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 4ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்