ராணுவ வீரர்களுக்கு நலத்திட்டங்கள்: பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் தகவல்

By பிடிஐ

ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதை விட, வீரர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரிக்கர் கூறியதாவது:

ஆயுதங்களின் பின்னணியில் இருக்கும் வீரர் மிகவும் வலிமை யானவராக இருக்க வேண்டும். அதுதான் மிகச்சிறந்த பாதுகாப்பு உத்தியாக இருக்கும். ராணுவ வீரர்களின் தற்கொலைகளை முழு மையாகத் தடுக்கும் விதத்தில், அவர்களுக்கான நலத்திட்ட நடவடிக்கைகள் மிகத் துரிதமாக செயல்படுத்தப்படும்.

வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை அறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உளவி யல் ஆலோசனை, துரித மாக சரி செய்யும் நடைமுறை, வழக்குகளை விசாரிக்க கூடுதல் தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு வழிமுறைகளில் பிரச்சினைகளுக் குத் தீர்வு காணப்படும்.

திருமணமானவர்களுக்கு குடும்பத்துடன் தங்குவதற்கான வாழிடம் அமைப்பது தொடர்பான விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கோவா கடற்படைப் பகுதியில் 700-800 வீடுகள், திருமணமான வீரர்களுக்காக கட்டப்பட்டு வரு கின்றன. இதுபோன்ற திட்டங் கள் நாடு முழுவதும் விரிவு படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம்.

தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருப்பது போன்றவை தற்கொலை எண் ணத்தைத் தூண்டுகின்றன.

உரிய நலத்திட்ட நடவடிக்கை கள் சரியான நேரத்தில் வழங் கப்படும். கடந்த 2011ம் ஆண்டு முதல் 449 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

வலைஞர் பக்கம்

24 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்