ஆபாசப்பட விவகாரம் பாஜக: எம்எல்ஏ சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

கர்நாடக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ பிரபு சவாண் தனது செல்போனில் உள்ள படத்தை ஆபாச நோக்கில் பார்த்தார். இந்த வீடியோ தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ், மஜதா உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவையில் பிரபு சவாண் பகிரங்க மன்னிப்புக் கோரினார். சபாநாயகர் காக்கோடு திம்மப்பா பாஜகவின் விளக்கத்தை ஏற்கவில்லை.'

ஆட்சேபத்துக்குரிய செயலில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ பிரபு சவாணை அவை நட வடிக்கையில் பங்கேற்பதிலிருந்து ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

காகோடு திம்மப்பா தொடர்ந்து பேசும்போது, கடந்த‌ 2012 டிசம்பர் 7-ம்தேதி கர்நாடக சட்டப் பேரவை கூட்டுக் குழு அளித்த பரிந் துரைப்படி, இனி உறுப்பினர்கள் அனைவ‌ரும் செல்போனை சட்டப்பேரவைக்கு உள்ளே கொண்டுவரக்கூடாது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்