மூடுபனியால் 70 ரயில்கள், 173 விமானங்கள் தாமதம்

By பிடிஐ

மூடுபனி காரணமாக வடமாநிலங் களில் நேற்று 70 ரயில்கள், 173 விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.

டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று சுமார் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள், 173 விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன.

புவனேஸ்வரம், சீல்டா, ராஞ்சி ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ராஜ் தானி ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாக டெல்லி வந்தடைந்தன. பல்வேறு எக்ஸ்பிரஸ்கள் 18 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

மூடுபனி காரணமாக அதி காலையில் புறப்பட வேண்டிய பல்வேறு ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டன. இதனால் டெல்லி உட்பட வடமாநில ரயில் நிலையங் களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

விபத்துகளை தவிர்க்க ரயிலை மிதமான வேகத்தில் இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு

இதேபோல் டெல்லிக்கு வந்து செல்லும் சுமார் 173-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நேற்று தாமதமாக இயக்கப்பட்டன. இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன.

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறியபோது, பனிப்பொழிவு காரணமாக 97 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. 76-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக டெல்லியை வந்தடைந்தன என்று தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று 4.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காலை 9 மணிக்கு பிறகே சாலைகளில் பனிமூட்டம் விலகி போக்குவரத்து சீரானது.

குளிரில் வாடிய எம்.பி.க்கள்

டெல்லி குளிர் எம்.பி.க்களையும் விட்டுவைக்கவில்லை. நாடாளு மன்ற வளாகத்தில் நேற்று பெரும் பாலான எம்.பி.க்கள் குளிரில் இருந்து தற்காத்து கொள்ள கம்பளி சால்வை, மேலாடைகளை அணிந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்