பாஜக-வுடன் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை: உமர் அப்துல்லா மறுப்பு

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக-வுடன் தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் நடத்தியது என்ற செய்திகளை உமர் அப்துல்லா கடுமையாக மறுத்துள்ளார்.

தேர்தலில் 15 இடங்கள் வென்ற தேசிய மாநாடு, 25 இடங்கள் வென்ற பாஜக-வை ஆதரித்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக நேற்று செய்திகள் எழுந்தன.

ஆனால், உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இதனை கடுமையாக மறுத்துள்ளார்:

“பாஜக-தேசிய மாநாடு பேச்சு வார்த்தைகள் பற்றி நிறைய கதைகள் புழங்கி வருகின்றன. நான் வலிமையாகக் கூறுகிறேன், அப்படிப்பட்ட உடன்பாடோ, பேச்சுவார்த்தைகளோ நடைபெறவில்லை.” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில், “மக்கள் ஜனநாயகக் கட்சி/பாஜக/காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலிருந்து யாராவது ஒருவர் ஆட்சியமைக்க முன்னெடுப்பு செய்யலாம். வரவர மடத்தனமான வதந்திகளை மறுப்பதே முழு நேர வேலையாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

6 mins ago

சினிமா

24 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

18 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

32 mins ago

வலைஞர் பக்கம்

36 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

46 mins ago

மேலும்