இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள்: நரேந்திர மோடி - புதின் சந்திப்பில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து

By செய்திப்பிரிவு

வரும் 2035-ம் ஆண்டுக்குள் ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெட்ரோல், எரிவாயு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே மொத்தம் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இதன்பின் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப் போது பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியாவை தாங்கும் தூண்களில் ஒன்றாக ரஷ்யா விளங்குகிறது. கடந்தகால வரலாற்றை திரும்பி பார்த்தால் இக்கட்டான நேரங்களில் இந்தி யாவுக்கு பக்கபலமாக நின்று ரஷ்யா உதவி செய்துள்ளது. அன்று முதல் இன்றுவரை இந்தியாவுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்து வதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும். ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரமான அரசை ஏற்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் எடுக்கப்படும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி நிலவ இரு நாடுகளும் கைகோத்து செயல்படும்.

ரஷ்ய உதவியுடன் வரும் 2035-ம் ஆண்டுக்குள் மேலும் 12 அணுஉலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அணுஉலைகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். அணுஉலைக்கு தேவையான பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பல் நமது கடற்படையின் வலிமையை பறைசாற்றுகிறது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளித்துள்ளது. இதன்படி ரஷ்ய உதவியுடன் அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஹெலிகாப்டர்கள் ராணுவ மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் படும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஹெலிகாப் டர்களை ஏற்றுமதி செய்யவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

இருநாட்டு கூட்டு முயற்சியில் ஏற்கெனவே பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போர் விமானம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இருநாட்டு ராணுவமும் இணைந்து போர் பயிற்சி நடத்தவும் பரஸ்பரம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்தியா வும் ரஷ்யாவும் இணைந்து பணி யாற்றும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது: அரசியல், வர்த்தக ரீதியாக இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. வர்த்தகத்தைப் பொறுத்தவரை நிர்ணயித்த இலக்கை எட்டவில்லை. எனவே இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக உறவை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.

கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள்

மோடி, புதின் சந்திப்பின்போது கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. கூடங்குளம் தவிர்த்து புதிய இடத்தில் ரஷ்ய உதவியுடன் அணுஉலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

குழாய் மூலமாக ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு எரிபொருளைக் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் பிடிஐ செய்தி நிறுவனத் துக்கும் ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்துக்கும் இடையே செய்தி பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒட்டுமொத்தமாக அணுசக்தி, பெட்ரோல், எரிவாயு, சுகாதாரம், முதலீடு, சுரங்கம், ஊடகம், காற்றாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்