அரசியல் நிர்பந்தத்துக்கு அடிபணியவில்லை: சிபிஐ இயக்குநர் அனில் குமார் சின்ஹா பேட்டி

By ஐஏஎன்எஸ், பிடிஐ

கடந்த 35 ஆண்டுகால அரசுப் பணியில், இதுவரை அரசியல் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பணியாற்றியதில்லை என்று சிபிஐ இயக்குநர் அனில் குமார் சின்ஹா கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர் அனில் குமார் சின்ஹா தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சில வழக்குகளில், எங்க ளின் செயல்பாடுகளை நீதிபதிகள் விமர்சிக்கின்றனர். அதை, பாடம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம்.

சாரதா நிதி நிறுவன முறை கேடு வழக்கில், எங்களின் பணியை வழக்கம் போல மேற்கொண்டு வருகிறோம். யாருக்கும் இசைந்துபோகும் வகையில் எங்களின் விசாரணை நடைபெறவில்லை. நீதிமன்றத் துக்கு திருப்தி ஏற்படும் வகையில், உண்மையின் அடிப்படையில்தான் நாங்கள் செயல்படுகிறோம்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வோர் தான் பெருமளவில் ஏமாற்றப்படு கின்றனர். இந்த முறையில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸாவில் மட்டும் 25 லட்சம் பேர் தங்களின் பணத்தை இழந்துள்ளனர். நாட்டில் நிதி முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு முன்பு, மக்கள் தங்களின் பேராசையை ஒழித்துக்கட்ட வேண்டும்.

நிதி நிறுவனங்கள் தொடர்பான எங்களின் விசாரணை, சட்டப்படி நடைபெற்று வருகிறது. யாருடைய தலையீடும் இருக்காது. அச்ச மின்றி, பாரபட்சமின்றி துணிச்ச லாக செயல்படுமாறும், விசாரணையின்போது யாரையும் துன்புறுத்தக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளேன். பிற விசாரணை அமைப் புகளின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடவில்லை. விசாரணை தொடர்பான அனைத்து விவரங் களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது. தேவையான அளவுக்கு மட்டுமே தகவல்களை என்னால் பகிர்ந்துகொள்ள முடியும்.

எங்களின் விசாரணையில் எந்தவிதமான தவறும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட முக்கியத் துவம் கொடுத்து விசாரித்து வருகிறோம்.

ஆண்டுதோறும் சராசரியாக 100 முதல் 1,200 வழக்குகள் வரை விசாரணை நடத்துகிறோம்.

கடந்த 35 ஆண்டுகால பணியில், அரசியல் நெருக்கடிக்கு அடிபணிந்து நான் பணிபுரிந்த தில்லை. இதற்கு முன்பு சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த போதுகூட அரசியல் நிர்ப்பந்தங் கள் ஏதும் எனக்கு வந்ததில்லை. விசாரணையை ஒருவருக்கு சாதக மாக நடத்தும்படி, எனக்கு யாரும் உத்தரவிட்டதில்லை. இவ்வாறு அனில் குமார் சின்ஹா கூறினார்.

1979-ம் ஆண்டு பிஹார் பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான அனில் குமார் சின்ஹா, கடந்த 3-ம் தேதி சிபிஐ இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்