எம்.பி.க்களுக்கு பிரதமர் எச்சரிக்கை எதிரொலி: அலிகர் மதமாற்ற நிகழ்ச்சி ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறுவதாக இருந்த மதமாற்ற நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தரம் ஜாக்ரன் சமிதியின் அலிகர் மாவட்ட அமைப்பாளரான சத்யபிரகாஷ் நவ்மான் அறிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் விடுத்த எச்சரிக்கையின் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

கிறிஸ்தவர்களை இந்து மதத் துக்கு மாற்றும் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக அலிகரில் நடந்து வருகிறது. இதை, ஆண்டுதோறும் கிறித்துமஸ் தினத்தன்று சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான இந்து ஜாக்ரன் சமிதி நடத்தி வருகிறது.

வரும் 25-ம் தேதியில் 4,000 கிறிஸ்தவர்கள், 1,000 முஸ்லிம்களையும் ’மீண்டும் இந்து’ மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இதனால், கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மதமாற்ற நிகழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அலிகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் எச்சரிக்கை காரணமா?

பாஜக எம்பிக்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் கடந்த இருவாரங் களாக எதிர்க்கட்சிகள் கிளப்பி வரும் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எல்லை மீறி பேசி சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என எச்சரித்திருந்தார்.

இதை மனதில் கொண்டு அலிகரில் மதமாற்ற நிகழ்ச்சி ஒத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச் சியில் பாஜக எம்.பி.க்கள் அதித்யநாத், சதீஷ் குமார் கவுதம் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சையால், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக வுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க வும் இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

12 hours ago

மேலும்