கோவா முதல்வராக லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் தேர்வு

By செய்திப்பிரிவு

கோவா மாநில புதிய முதல்வராக லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை, பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அமைச்சரவையில் பதவி காத்திருப்பதால் முதல்வர் பதவியை பரிக்கர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கோவா மாநில பாஜக சட்டப்பேரவை குழு கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்தில், புதிய முதல்வராக லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார். இத்தகவலை, கோவா பாஜக மேலிட பார்வையாளர் ராஜீவ் பிரதாப் ரூடி அறிவித்தார்.

லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர், தற்போது கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்