ஜாலியன்வாலாபாக் அறக்கட்டளை: ராகுலை நீக்கும் மத்திய அரசு முடிவுக்கு அமரிந்தர் எதிர்ப்பு

By பிடிஐ

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மக்களவையில் கடந்த 8-ம் தேதி ஒரு மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில், “ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக மாற்ற வேண்டும். எனவே, இதன் நிரந்தர உறுப்பினராக காங்கிரஸ் கட்சித் தலைவர் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்க அனுமதி வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற மசோதா பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியின்போதும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் கூறும்போது, “ஜாலியன்வாலாபாக் நினைவிடம் அமைக்கப்பட்டது முதல் அதனுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவரை நீக்கும் முடிவு முற்றிலும் தவறானது” என்றார். 1951-ல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர், கலாச்சார துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், பஞ்சாப் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

43 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்