கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரைச் சந்திக்க வேண்டும்: இன்றுக்குள் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

கர்நாடக அதிருப்தி காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலைக்குள் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து தெரிவி்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல இன்று எம்எல்ஏக்கள் அளிக்கும் ராஜினாமா கடிதத்தின் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் குமாரசாமி மீது அதிருப்தி அடைந்த  காங்கிரஸைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கடந்த 6-ம் தேதி  ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தனர்.

அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேரையும் பாஜக நிர்வாகிகள் தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்னர்.  

அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்த பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் , 8 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் விதிமுறைக்கு மாறாக இருக்கிறது எனக் கூறி அதை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்து விட்டார்.

மேலும், இதில் 5 எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்ட 8 எம்எல்ஏக்களும் சபாநாயகரை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கடிதம் அளித்தால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த சூழலில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆகியோர் இணைந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், " நாங்கள் 13 பேரும் எங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபின்பும், எங்களின் கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அரசைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமையை செய்யாமல் சபாநாயகர் புறக்கணிக்கிறார். எங்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலித்து ஏற்க உத்தரவிட வேண்டும் " எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா கோஸ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுகையில், " எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடித்ததை அளிக்க அனுமதிக்க வேண்டும். சபாநாயகர் தனக்குரிய பணியைச் செய்ய மறுக்கிறார் " எனத் தெரிவி்த்தார்

இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில் " மும்பையில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா குறித்து முறைப்படி தெரிவிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகரும் இன்றுக்குள் முடிவு எடுத்து அதை நீதிமன்றத்துக்கு  தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் இன்றுக்குள் தெரிவித்தபின் இந்த விவகாரம் நாளை மீண்டும் விசாரிக்கப்படும்

10 எம்எல்ஏக்களும் சபாநாயகரைச் சந்திக்கச் செல்லும்போது, அவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து சபாநாயகர் அறை வரை போதுமான போலீஸ் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று கர்நாடக போலீஸ் டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்