ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையையோ அல்லது அதன் பிரீமியம் ரயில்களையோ தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச் சர் பியூஷ் கோயல் கூறினார்

இது தொடர்பாக மாநிலங் களவையில் அவர் எழுத்துமூலம் அளித்த பதிலில், “ரயில்வே துறை யையோ அல்லது ராஜ்தானி, சதாப்தி போன்ற பிரீமியம் கட்டண ரயில்களையோ தனியார் மயமாக் கும் திட்டம் அரசுக்கு இல்லை.

ரயில்வே அமைச்சகம் தனது 100 நாள் திட்டத்தில் ஐஆர்சிடிசி-க்கு 2 ரயில்கள் வழங் கப்படும் என கூறியுள்ளது. இதில் பயண டிக்கெட் மற்றும் பயணிகளுக்கான சேவையை ஐஆர்சிடிசி வழங்கும். இந்த ரயில்கள் முக்கிய நகரங் களுக்கு இடையே இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பியூஷ் கோயல் அளித் துள்ள பதிலில், “மும்பை -அகமதா பாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் ரூ. 1,08,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 81 சதவீதத் தொகையை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை கடனாக வழங்குகிறது, 2023-ல் இத்திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 24 ரயில் பெட்டிகள் ஜப்பான் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் முறையில் கொள்முதல் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. 24 ரயில்பெட்டிகளை இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

வணிகம்

23 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்