வடமாநிலங்களில் வெள்ளம்: பிஹார், உத்தரப் பிரதேசம், அசாமில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

By பிடிஐ

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிபிஹார், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் பலியான்ோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

பிஹார், உத்தரப் பிரதேசம்,  அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கடந்த சில நாட்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

பிஹார், அசாம், உத்தரப் பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பிஹார் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்துக்கு 253 பேர் இறந்துள்ளனர்.

இந்தமாநிலங்களில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அசாம்மை மாநிலத்தைப் பொறுத்தவரை மழையின் அளவு குறைந்துள்ளதால் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கனமழை

உத்தரப் பிரதேசத்திலும் கடும் மழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக 24 மாவட்டங்களில் உள்ள 2,523 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உத்தரப் பிரதேச வெள்ளத்துக்கு 33 பேர் பலியாகியுள்ளனர்.

மத்தியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்