பிஹார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா நிதிஷ் குமார்?

By செய்திப்பிரிவு

பாஜகவுடன் ஆதரவோடு பிஹாரில் ஆட்சி அமைந்துள்ள நிதிஷ் குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்கிறது.

பாஜக ஆதரவோடு பிஹார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் 6-வது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க இன்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்கிறது.

243 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. நிதிஷ் மற்றும் பாஜக கூட்டணிக்கு ஏற்கனவே 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுள்ளனர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த 80 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்களும் நிதிஷ் குமார் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.

போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நிதிஷ் குமாருக்கும் உள்ளதால் தேசிய ஜன நாயக் கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் புதன்கிழமை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதையடுத்து பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைத்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 243-ல் ஆர்ஜேடி அதிகபட்சமாக 80 இடங்களிலும், நிதிஷ் கட்சி 71 இடங்களிலும் காங்கிரஸ் 27-லும் வெற்றி பெற்றன. எனினும், லாலு மீது மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் முதல்வராக முடியவில்லை. இதையடுத்து நிதிஷ் குமார் 3-வது முறையாக முதல்வரானரார். லாலு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்