தகவல் பாதுகாப்பு உரிமை என்பது தனிநபர் உரிமையாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

By பிடிஐ

தனிநபர் உரிமை (பிரைவசி) என்பது பன்முகத்தன்மை வாய்ந்ததால் அதனை அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இவ்வாறாக தன் வாதத்தை முன்வைத்தார்.

“தனியுரிமைக்கான அடிப்படை உரிமை இல்லை. அப்படி அடிப்படை உரிமை என்று நாம் அனுமானித்தாலும் கூட இது பன்முகத்தன்மை வாய்ந்தது. எனவே அதுகாரணமாகவே ஒவ்வொரு அம்சத்தையும் அடிப்படை உரிமையாக கருதலாகாது.

மேலும் தகவல் பாதுகாப்புக்கான உரிமை தனிநபர் உரிமையாகாது அது அடிப்படை உரிமையும் ஆகாது” என்றார்.

புதனன்று இதே அமர்வின் முன்பு அவர் தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையே ஆனால் அது முழுமுற்றானதல்ல என்றும் வாதிட்டார்.

ஒரு பெண்ணுக்கு எத்தனை குழந்தைகள் என்ற தகவலை ஒரு அரசு பெறலாம், மாறாக அவர் எத்தனை முறை கருக்கலைப்பு மேற்கொண்டார் என்று கேள்விக்கு பதிலளிக்குமாறு நிர்பந்திக்க முடியாது என்று கோர்ட் நோக்குகிறது.

மேலும் தனிநபர் உரிமை என்பது பொதுச்சட்ட உரிமை என்பதற்கும் அடிப்படை உரிமை என்பதற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குமாறு அட்டர்னி ஜெனரலை அமர்வு கேட்டது.

பொதுச்சட்ட உரிமை என்பது அடிப்படை உரிமை என்று ஒன்றைக் கருதும்பட்சத்தில் சிவில் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதாகும். ஆனால் அடிப்படை உரிமை என்றால் நீதிமன்றம் அதனை அமல்படுத்த வேண்டும் என்றார் அட்டர்னி ஜெனரல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்