நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்பு

By செய்திப்பிரிவு

 

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார்.

தற்போதைய குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைவதால் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் முன்னாள் ஆளுநர் ராம் நாத் கோவிந்தும், காங்கிரஸ் கூட் டணி சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் போட்டி யிட்டனர். கடந்த 20-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் விழாவில் நாட்டின் 14-வது குடியர சுத் தலைவராக அவர் பதவியேற்க உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அவ ருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு மெய்க்காவலர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக 1997 முதல் 2002 வரை கே.ஆர்.நாராயணன் பணியாற்றினார். அவருக்கு அடுத்து 2-வது தலித் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்