கேஜ்ரிவால் முதன்மைச் செயலரை கைது செய்தது சிபிஐ

By விஜய்தா சிங்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரை சிபிஐ இன்று (திங்கள்) கைது செய்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜேந்திர குமார் தனது பதவியைப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயல்பட்டதாக புகார்கள் எழ டிசம்பர் 6, 2015-ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

சிபிஐ பதிவு செய்த புகாரில் ராஜேந்திர குமார் டெல்லி கல்வித்துறையில் அதிகாரியாக இருந்த போது எண்டவர்ஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திற்கு 2006-ம் ஆண்டு ரூ.9.5 கோடி பெறுமான டெண்டருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், ராஜேந்திர குமாரின் பள்ளித் தோழர் அசோக் குமார் என்பவருடன் கூட்டிணைந்து அவர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்று சிபிஐ கூறியுள்ளது.

டெல்லி அரசுப்பள்ளிகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் மென்பொருளை இந்த நிறுவனம் வழங்குவதாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

வாழ்வியல்

38 mins ago

உலகம்

36 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்