காஷ்மீரில் கல்வீச்சை தடுக்க மகளிர் படைப் பிரிவு

By பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போராட்டத்தின்போது கல் எரிவது உள்ளிட்ட சம்பவங்களை ஒடுக்க, அனைத்து மகளிர் படைப் பிரிவு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் எந்த போராட்டமாக இருந்தாலும் பாதுகாப்புப் படை யினர் மீது இளைஞர்கள் கல் வீச்சில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிர மடைந்ததால் ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் கடந்த 24-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

ஆனாலும் நகரின் லால் சவுக் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை யினருக்கும் மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, மாணவிகளும் இதில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கல் எரிவது போன்ற சம்பவங்களை ஒடுக்க மகளிர் படைப் பிரிவை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் இவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பணிகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்