சசிகலா முதல்வர் ஆக தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது தோழி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் அமைப்பின் பொதுச்செய லாளர் செந்தில் குமார் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார். ஒருவேளை வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக பதவி விலக நேரிடும். இதன் காரணமாக தமிழகத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது.

வார்தா புயல், பண மதிப்பு நீக்கம், முதல்வர் ஜெயலலிதா மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் கட்சி தொண்டர்களால் கலவரம் ஏற்பட்டால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே அவர் பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

46 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்