அருணாசல பிரதேசத்தில் இரண்டே வாக்காளருக்கு ஒரு பூத்

By செய்திப்பிரிவு

அருணாசல பிரதேச மாநிலத்தில் 2 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சா மாவட்டத்தில் ஹயுலியாங் வட்டத்துக்குட்பட்ட மாலோகானில் அமைக்கப்பட்டுள்ள இதுதான் மிகச்சிறிய வாக்குப் பதிவு மையமாகும்.

இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 10-க்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட 8 வாக்குச் சாவடிகளும், 20-க்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட 20 வாக்குச் சாவடிகளும், 50-க்கும் குறைவான வாக்காளர்களுடன் 105 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடாநகரில் 1,650 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 'சி' செக்டார் வாக்குச் சாவடிதான் மாநிலத்தின் மிகப்பெரிய வாக்குச் சாவடியாகும். மாநிலத்தில் மொத்தம் 2,158 வாக்குப் பதிவு மையங்கள் உள்ளன. இதில் 664 மையங்கள் போக்குவரத்து வசதி குறைவான தொலைதூரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்கள் 7,53,170.

2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் நடை பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்