4-வது மாடியிலிருந்து குதித்து ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை: பணி நெருக்கடி காரணமா? போலீஸார் விசாரணை

By இரா.வினோத்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் சவுத்ரி (27) 2 ஆண்டுகளாக பெங்களூரு ராமூர்த்தி நகரில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான இவர், எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது உறவினர்களிடம் கூறியுள் ளார். அவர்கள் ராஜேஷை சமாதானப்படுத்தி அலுவலகத் துக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் சிக்சந்திரா அருகே உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனர். சுமார் 8.30 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர், அவருடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜேஷின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்த‌னர். இதற்கிடையே அவரை காப்பாற்று வதற்காக நான்காவது மாடியை மீட்பு படையினர் நெருங்கினர். இதனை கவனித்த ராஜேஷ், வேக‌ மாக ஓடிவந்து கீழே குதித்தார். கீழே இருந்தவர்கள் வலையை விரித்திருந்தபோதும் அவரைப் பிடிக்க முடியாமல் போனது.

படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் ராஜேஷ் சவுத்ரி மரணமடைந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி னர். மேலும் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

காதல் தோல்வி காரணமாகவோ, குடும்ப பிரச்சினை காரணமாகவோ ராஜேஷ் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என அவரது உறவினர்கள் போலீஸா ரிடம் கூறியுள்ளனர். எனவே பணி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்