டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக நியமனம்

By செய்திப்பிரிவு

சிபிஐ புதிய இயக்குநராக டெல்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநராக இருந்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து ராகேஷ் அஸ்தானா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத் தலின்படி சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. அதன்படி பிரதமர் மோடி தலைமையில் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். இந்த கூட்டத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில் டெல்லி போலீஸ் ஆணையர் அலோக் குமார் வர்மா சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

1979-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம், யூனியன் பிரதேச ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அலோக் குமார் கடந்த 11 மாதங்கள் டெல்லி காவல் துறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

வரும் ஜூலையில் அவர் ஓய்வுபெற உள்ளார். எனினும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அலோக் குமார் வர்மா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்