7-வது ஊதிய குழு பரிந்துரை: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு

By பிடிஐ

மத்திய அரசு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 23.55 சதவீதம் வரை சம்பளம் உயர்த் தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது அறிக் கையை தாக்கல் செய்தது. அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த குழு அளித்த அறிக்கை யின் அடிப்படையில் நிதியமைச் சகம் குறிப்பை தயாரித்து, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கவுள்ளது. நாளைக் குள் இந்த குறிப்பை படித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

7-வது ஊதிய குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச் சரவை முறைப்படி ஒப்புதல் அளித்த தும் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 23.55 சதவீதம் வரை ஒட்டுமொத்தமாக சம்பளம் உயர்த்தப்படும். இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் ஜனவரி 1-ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.23,500 மற்றும் அதிகபட்ச ஊதியமாக ரூ.3.25 லட்சம் நிர்ணயிக்கவும் மத்திய அமைச் சரவை செயலர்கள் குழு அறிக்கையில் பரிந்துரைத் திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புதிய ஊதிய உயர்வு மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதி யர்களும் பயனடைய வுள்ளனர். மத்திய அரசு ஊழியர் களுக்கு ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் என ஒட்டுமொத்த மாக 23.55 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என 7-வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

வலைஞர் பக்கம்

19 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

25 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்