தேவகவுடா கட்சியில் இணைந்தார் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா- எடியூரப்பாவை எதிர்த்து ஷிமோகாவில் போட்டி

By இரா.வினோத்

கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும் ந‌டிகர் ராஜ்குமாரின் மருமகளுமான கீதா தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

அவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கட்சித் தலைவர் தேவகவுடா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீதா சிவராஜ்குமார் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி தேவகவுடா வரவேற்றார். ஷிமோகா மக்களவை தொகுதியில் ம.ஜ.த. சார்பாக கீதா போட்டியிடுவார் என்றும் தேவகவுடா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கீதா சிவராஜ்குமார் கூறியதாவது:

எனது தந்தை பங்காரப்பா ஷிமோகாவில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் அறிமுகமானவர்.எனது இன்னொரு தந்தை (மாமனார்) ராஜ்குமார் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் முகவரியாக திகழ்ந்தவர். நானும் ஷிமோகாவில் இருக்கும் ஒவ்வொரு தெருவிலும் வலம்வந்தவள்.

எனது தந்தையை, தாயை, அண்ணனை தொடர்ந்து வெற்றி பெறச் செய்தது போல என்னையும் தேர்தலில் வெற்றிபெற செய்யுங்கள். ஷிமோகாவின் தேவைக்காக டெல்லியில் குரல்கொடுப்பேன் என்றார்.

வெற்றி பெறுவாரா?

கீதா, ஷிமோகா தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். பலமுறை இதே தொகுதியில் வென்ற பங்காரப்பாவின் மகள் என்பதால் எளிதாக வெற்றி பெறலாம் என நம்புகிறார். அவருடைய அண்ணன் மது பங்காரப்பாவும், கணவர் சிவராஜ்குமாரும் பிரசாரத்தில் உதவியாக இருப்பதால் தைரியமாக எடியூரப்பாவை எதிர்கொள்கிறார்.

அதே நேரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள எடியூரப்பாவை வீழ்த்துவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஷிமோகா தொகுதி எடியூரப்பாவின் சொந்த்த‌ தொகுதி. அவருடைய மகன் ராகவேந்திரா கடந்த முறை அதிக வாக்குகள் எண்ணிக்கையில் ஷிமோகாவில் வாகை சூடினார். தொகுதியில் பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியும், எடியூரப்பாவின் அனுதாபிகளும், அவரின் லிங்காயத்து வகுப்பினரும் எடியூரப் பாவின் வெற்றியை உறுதி செய்வார்கள் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்