டெல்லியில் போட்டியிட ஓவைஸி கட்சி திட்டம்

By செய்திப்பிரிவு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், அசாதுதீன் ஓவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி முதன்முதலாகப் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இக்கட்சி, டெல்லி மத்தியா மஹால் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஷோஹிப் இக்பாலை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய ஷோஹிப் இக்பால் கூறும்போது, ‘கட்சி மாறுவது குறித்த பேச்சில் உண்மை இல்லை. ஆனால், பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக, ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் திரிணமூல் காங்கிரஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். டெல்லியில் நடந்த மதக்கலவரத்தை அடக்க, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.’ எனத் தெரிவித்தார்.

இங்குள்ள சிறுபான்மை வாக்கு களை குறி வைத்து அமைக் கப்படும் புதிய கூட்டணியால், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல், பாஜகவுக்கே சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஆந்திர தலைநகரான ஹைதராபாத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். இது, மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் 28 இடங்களில் போட்டியிட்டு, இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

வணிகம்

31 mins ago

இந்தியா

33 mins ago

சினிமா

39 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்