ஆந்திராவில் 2 கிராமங்களைத் தத்தெடுத்தார் நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் இரண்டு கிராமங்களை தத்தெடுப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர்கள் ஆண்டுக்கு ஒரு கிராமத்தை தத்து எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். ஆனால் நான் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நர்சாபுரம் தொகுதியில் எனக்கு பழக்கப்பட்ட இரண்டு கிராமங்களை தத்து எடுக்கிறேன்.

இந்தத் தொகுதியில் பெத்த மைனம்வானி லங்கா, கிழக்கு தாள்ளா ஆகிய 2 கிராமங்கள் எனக்கு கடந்த 20 ஆண்டுகளாக பழக்கம். விரைவில் இந்த கிராமங்களில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அறிவிப்பேன். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஆந்திர தலைநகருக்காக விவசாய நிலங்களை வாங்கும் விஷயத்தில் அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியாகும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நரசாபுரம் எம்.பி. கோகராஜு கங்கராஜு அப்போது உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

28 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்