4 மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்

By செய்திப்பிரிவு

திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நேற்று திடீரென குறைந் தது. இதனால் சர்வ தரிசனத்தில் காத்திருந்த பக்தர்கள் வெறும் 4 மணி நேரத்திலேயே ஏழுமலை யானை தரிசித்தனர். இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன கட்டணத்தில் சென்றவர்கள் 2 மணி நேரத்திலும், நடைபாதையாக வந்த பக்தர்கள் குறைந்த நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர். சிலர் இரு முறை சுவாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நேற்று காலை ஹரிஹர அறக்கட்டளையின் தலைவர் பார்த்தசாரதி ஏழுமலை யானைத் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘மொரிஷியஸில் 108 அடி உயர ஏழுமலையான் சிலையை நிறுவ உள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். விழாவில் பங்கேற்கும்படி ஆந்திரா, தெலங் கானா முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

15 mins ago

கல்வி

10 mins ago

இந்தியா

38 mins ago

கருத்துப் பேழை

48 mins ago

தமிழகம்

25 mins ago

தொழில்நுட்பம்

31 mins ago

கருத்துப் பேழை

54 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்