சிந்து எங்கள் மகள்: உரிமை கோரும் ஆந்திரம், தெலுங்கானா

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்து தங்களுக்குத் தான் சொந்தம் என உரிமை கோர ஆரம்பித்திருக்கின்றனர் ஆந்திர, தெலுங்கானா மக்கள்.

தெலுங்கானா மக்கள் சிந்து எங்கள் ஊர் அம்மாயி (தெலுங்கு மொழியில் பெண் குழந்தை) என்கின்றனர். ஆந்திர மக்களோ சிந்து எங்களுக்குத்தான் சொந்தம். அவர் எங்கள் பிட்டா (பெண் குழந்தை) என உரிமை கோருகின்றனர்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து தெலுங்கான மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு தரப்பினரும், ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்தவர் என்று மற்றொரு தரப்பினரும் சிந்துவின் ஒலிம்பிக் வெற்றிக்கு உரிமை கோரி வருகின்றனர். அதுமட்டுமில்லாது சிலர் சிந்துவின் குடும்பப் பெயர்களை ஆராய்ந்து சிந்துவின் சாதியை கண்டறியும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் சிலர், சிந்து தெலுங்கானவில் பிறந்தாரோ, ஆந்திராவில் பிறந்தாரோ சிந்து முதலில் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று சிந்துவுக்கு உரிமை கோருபவர்களுக்கு பதிலளித்துள்ளனர்.

சிந்து தெலுங்கானவை சேர்ந்தவர்:

சிந்து தெலுங்கானாவில் செகந்தராபாத்தில் பிறந்துள்ளார். அவரது பெற்றோர்கள் இருவருமே முன்னாள் வாலிபால் ஆட்டக்காரர்கள். சிந்துவின் தந்தை தற்போது மத்திய ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார்.

தெலுங்கானவின் விளம்பர தூதர்:

தெலுங்கானா மாநில விளம்பரத் தூதுவராக இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு பதிலாக பி.வி. சிந்துவை நியமிக்க தெலுங்கானாவில் ஆதரவு பெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

29 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்