ஜேஎன்யூ விவகாரம்: குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் ராகுல்

By பிடிஐ

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கைது, அதனைத் தொடர்ந்து நடைபெறும் சர்ச்சைகள் தொடர்பாகவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து முறையிடவுள்ளார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது, புனே திரைப்பட கல்லூரி மாணவர் போராட்டம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் போராட்டம், ஜே.என்.யூ. மாணவர் போராட்டம் ஆகியனவற்றை மத்திய அரசு கையாண்டவிதம் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைக்கவுள்ளனர்.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாரை ஆஜர்படுத்தியபோது சிலர் மாணவர்கள் மீதும் கண்ணய்யா குமார் மீதும் பத்திரிகையாளர்கள் சிலர் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரண்டாவது முறையாக பாட்டியாலா நீதிமன்றத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்தே ராகுல் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளனர்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறிய காங்கிரஸ், போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நேற்று (புதன்கிழமை) வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

கருத்துப் பேழை

6 mins ago

சுற்றுலா

43 mins ago

சினிமா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்