பான் எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது?

By செய்திப்பிரிவு

மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன் படி வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக வருமான வரி கணக்கு தொடர்பான இணையதள பக்கமான >www.incometaxindiaefiling.gov.in. என்ற பக்கத்தில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதோ அதற்கான வழிமுறை விவரம்:

வருமான வரித்துறையின் >http://www.incometaxindiaefiling.gov.in./என்ற இணையப் பக்கத்தை கிளிக் செய்து உள்ளே செல்லவும். இதற்கு எந்த ரிஜிஸ்ட்ரேஷனும் நீங்கள் செய்ய வேண்டாம்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.

‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்கவேண்டும்.

வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும்.

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இணைக்கலாம்

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு குறுஞ்செய்தி வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம்.

UIDPAN12 digit Aadhaar>10 digit PAN>

எடுத்துகாட்டு: UIDPAN 123456789012 ABCDE1234F

கொடுக்கப்பட்ட ஆதார் பெயரில் ஏதேனும் சிறிய பிழை இருப்பின், ஆதார் ஒடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) தேவைப்படும்.

ஒன் டைம் பாஸ்வேர்ட் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்அல்லது இ-மெயிலுக்கு அனுப்படும்.

’பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பை ஏற்படுத்த பயனாளர்கள் பான் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பிறந்த தேதி மற்றும் பாலினத்தை சரியாக குறிப்பிடுவது மிக அவசியம்.

பான் எண்ணில் உள்ள பெயர் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் வேறாக இருந்தால்:

ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும்.

ஆதாரம்: வருமான வரித்துறை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

வலைஞர் பக்கம்

22 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்