மோடியை கேலி செய்யும் நூலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

By பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்யும் விதமாக எழுதப்பட்ட நூலைத் தடை செய்யக் கோரும் மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸைச் சேர்ந்த ஜெயேஷ் ஷா என்பவர் ‘பெகுஜி ஹேவ் டில்லி மா’ (பெகுஜி இப்போது டெல்லியில் இருக்கிறார்) என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி அளித்த வாக்குறுதிகள் பற்றியும், அவற்றை நிறைவேற்றுவதில் மோடி தோல்வியடைந்துவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியைக் கிண்டல் செய்யும் இப்புத்தகம் அவரது புகழுக்குக் களங்கம் விளைவிக்கிறது. எனவே புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி, சமூக சேவகர் நர்சிங் சோலங்கி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த குடிமையியல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.தவே, புத்தகத்தை தடை செய்வது, அரசியல் சாசன சட்டம் 19-வது பிரிவின்படி கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்