இ-ரிக் ஷாக்களுக்கு அனுமதி தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

By பிடிஐ

சாலைகளில் இயக்கப்படுவதற் கான அனுமதியை இ-ரிக் ஷாக்கள் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. அதில், இ-ரிக் ஷா, இ-கார்ட்ஸ் ஆகியவற்றுக்கு எவ்வித அனுமதியும் தேவை யில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “பயணிகள், பயணிகளின் உடமைகள், சரக்கு களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் இ-கார்ட்ஸ், இ-ரிக் ஷா ஆகியவற்றுக்கு மோட் டார் வாகன சட்டம் 1988- பிரிவு 66 உட்பிரிவு 1 பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மாநில அரசுகள், இந்த வாகனங்களை குறிப்பிட்ட பகுதி அல்லது குறிப்பிட்ட சாலை களில் இயங்குவதற்கு போக்கு வரத்து சட்டத்தின்கீழ் உரிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இ-ரிக்ஷாக்களை இயக்கு வதற்கு அனுமதி பெறுவது சிரம மாக இருந்தது. தற்போதைய உத்தரவின்மூலம் இந்தியா முழுக்க இவை செயல்படுவது எளிதாக்கப்பட்டப்பட்டுள்ளது” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலாவதியான வர்த்தக வாகனங்களைப் பயன் பாட்டிலிருந்து அப்புறப் படுத்துவற் கான வாகன கொள்கைக்கு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரி வித்துள்ளார்.

“இத்திட்டம் சார்ந்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். இக்கொள்கை அமல்படுத்தப் பட்டால் காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும்” எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.

“சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைக்க, நீர்வழிப் போக்குவரத்து திட்டம் மேம் படுத்தப்படும். 111 ஆற்றுவழி தடங்களை மேம்படுத்துவது, 7,500 கி.மீ தொலைவுக்கு கடற் கரையோர வழித்தடத்தைப் பயன்படுத்து ஆகியவை தொடர் பாக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது” என கட்கரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்