சமூக வலைதளங்களில் அந்தரங்க பாதுகாப்பு?- வாட்ஸ் அப், பேஸ்புக், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By பிடிஐ

சமூக வலைதளங்களில் அந்தரங்க விஷயங்கள் கேள்விக் குறியாவது குறித்த வழக்கில், மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனங்கள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் தனிநபர்களுக் குள் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள், படங்கள் வர்த்தக ரீதியாக பலர் தவறாகப் பயன் படுத்திக் கொள்வது பற்றி நீண்ட காலமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, தனிநபர்கள் வெளி யிடும் தகவல்களை சமூக வலை தளங்கள் விளம்பர உத்திக்காக தவறாகப் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். தனிநபர்களுக்குள் பகிரப்படும் தகவல்களின் அந்தரங்கம் காக்கப்பட வேண்டும். அதற்காக தனி கொள்கைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் இந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் உதவும்படி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியை உச்ச நீதி மன்றம் கேட்டுக் கொண்டது.

மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே நீதிமன்றத்தில் ஆஜராகி கூறும்போது, ‘‘சமூக வலைதளங் களில் பொதுமக்களின் அந்தரங்க விஷயங்கள் மீறப்படுகின்றன. இது சட்டப்பிரிவு 19 (பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம்), சட்டப்பிரிவு 21 (வாழும் உரிமை) ஆகிவற்றுக்கு எதிரானது’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்