மருந்து விலை குறைப்பு உடனடியாக அமலாகும் - உச்சநீதிமன்றம் ஆணை

By செய்திப்பிரிவு

விலை குறைத்து விற்கவேண்டிய மருந்த கள் என அரசு பிறப்பிக்கும் உத்தரவானது அதுபற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளி யான உடனேயே அமலுக்கு வரும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்த உத்தரவை 15 நாள்களுக்குள் அமல்படுத்தவேண்டும் என்றும் இந்த அவகாச காலத்தில் விற்காத இருப்புகளை உயர் விலையில் விற்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு பிறப்பித்த மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவை எதிர்த்து சில மருந்து நிறுவனங்களும் விநியோகஸ்தர்க ளும் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.

15 நாள் அவகாசத்துக்கு முன், உற்பத்தியாளர்கள் வழங்கும் மருந்துகளை நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்க அனுமதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவு பற்றி அறிவிப்பு அரசிதழில் வெளியானதுமே விற்கப்படாமல் கையிருப்பில் உள்ள மருந்துகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கவேண்டும் என மத்திய அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றனர்.

மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தர வின் பத்தி 14(1)ன்படி விலை பற்றிய அறிவிக்கை அரசிதழில் வெளியானதுமே அது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த 15 நாள் அவகாசம் கொடுப்பது விற்காமல் இருப்பில் உள்ள மருந்துகள் விஷயத்தில் தகுந்த ஏற்பாடு செய்ய மருந்து உற்பத்தி யாளர்களுக்கு வசதி செய்யவே ஆகும்.

மருந்து உற்பத்தியாளர்கள், விநியோ கஸ்தர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்வது என்பது, கொடுத்துள்ள 15 நாள் அவகாசத்துக்கு முன் தயாரிப்பாளர்கள் விடுவிக்கும் மருந்துகளை நுகர்வோருக்கு அதிக விலையில் விற்கலாம் என்பதாகும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நுகர்வோ ருக்கு ஒரே மருந்து இரு வேறு விலையில் விற்பனைக்கு வரக்கூடும். இது தவிர்க்கப்படவேண்டும் என்பதே எங்கள் கருத்து என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை யின் இறுதி நோக்கம், நுகர்வோருக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடாது என்பதே. தற்போதைய விலைப்பட்டியலில் உள்ள தற்கு மேலாகவோ அல்லது மருந்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேலாகவோ நுகர்வோருக்கு மருந்து விற்கக்கூடாது. இதில் எது குறைவாக உள்ளதோ அதில் உள்ளபடி விற்கப்படவேண்டும் என்பதுதான் என்றும் அமர்வு தெரிவித்தது.

இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்ப தாக தெரிவித்த நீதிபதிகள் டில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பிழையானது என்று தெரிவித்தனர்.- பி.டி.ஐ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்