ஜம்மு-காஷ்மீர் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மறு சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென உச்ச நீதின்றத்தில் ஜம்மு - காஷ்மீர் அவாமி தேசிய மாநாட்டுக் கட்சி மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான வழக்கு ஒன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருவதால், அதே அமர்வு முன் இந்த மனுவும் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்