சமூக வலைதளங்களுக்கு காஷ்மீர் மாநிலத்தில் தடை

By செய்திப்பிரிவு

பேஸ்புக், வாட்ஆப், ட்விட்டர் உட்பட 22 சமூக வலைதளங்களை ஜம்மு காஷ்மீர் அரசு நேற்று அதிரடியாகத் தடை செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுத் தாக்கும் பிரிவினை வாதிகளின் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, வன்முறை தாக்கு தலை நிகழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அம்மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கே.கோபால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட 22 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறியிருப்ப தாவது:

பொது ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் இணைய தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு அரசு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. தனிநபராகவோ, குழுவாகவே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செய்திகள், கருத்துச் சித்திரங்களைச் சமூக வலைதளங்கள் பரவச் செய்யக்கூடாது. இந்த உத்தரவு ஒரு மாதத்துக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்