தேச துரோக வழக்கில் ‘சிமி’ முன்னாள் தலைவர் உட்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை: இந்தூர் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தேசத் துரோக வழக்கில், தடை செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு குடி யிருப்பில் சந்தேகப்படும் வகையில் தங்கியிருந்த சிமி இயக்கத்தைச் சேர்ந்த சப்தர் நகோரி மற்றும் 10 பேரை கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வந்ததும் இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாத பயிற்சி முாகம்களை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவின் (தேச துரோகம்) கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் கோரல் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டி லிருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் அடிப்படைவாத கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இவற்றை இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சிமி இயக்கத்தினர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்தூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, குற்றம்சாட்டப் பட்ட சப்தர் உள்ளிட்ட 3 பேரின் கோரிக்கையை ஏற்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், காணொலி காட்சி மூலம் சிபிஐ நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டனர். அப்போது நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்ட 11 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப் பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்