மாவோயிஸ்ட் வன்முறையால் ஏற்படும் பாதிப்புக்கு தீர்வு காண டெல்லியில் இன்று 10 மாநில முதல்வர்கள் கூட்டம்

By பிடிஐ

உள்துறை அமைச்சர் தலைமையில் நடக்கிறது

*

மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநில முதல்வர்கள் கூட்டம் மத்திய உள் துறை அமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர்.

இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாநில முதல்வர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும் என அறிவித்தார்.

இதன்படி இந்தக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு எதிரான சிஆர்பிஎப் பிராந்திய தலைமையகம் கொல்கத்தாவி லிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் பற்றிய உளவு தகவல் சேகரிப்பு முறையில் சீர்திருத்தம் செய்வது, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையை உன்னிப்பாக கவனிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பிரச்சினைக்குரிய பகுதிகளை அடையாளம் காண்பது மற்றும் சண்டையின்போது பாது காப்புப் படையினர் பலி எண்ணிக் கையைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கு மாறு, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்கம், பிஹார், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் வன்முறையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 35 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், துணை ராணுவப் படை, உளவு அமைப்பின் தலைவர்கள் உள் ளிட்டோரும் இதில் பங்கேற் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்