பாகிஸ்தான் தப்பிக்க முடியாது: இந்திய வெளியுறவுச் செயலர் கருத்து

By பிடிஐ

அமெரிக்காவை சேர்ந்த ஈஸ்ட் வெஸ்ட் மையம் சார்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் 2008 மும்பை தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.

மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது என்று பாகிஸ்தான் வாதிட்டு வருகிறது. இதை சுட்டிக் காட்டி பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் ஜெய்சங்கர் விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:

தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சாக்குப்போக்கு கூறி யாரும் (பாகிஸ்தான்) தப்பிக்க முடியாது. தீவிரவாதிகளை பொறுத்தவரை நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று வகைப் படுத்த முடியாது. எந்த நாட்டில் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக் கப்படுகிறது. எங்கிருந்து தீவிர வாதிகள் உருவாகிறார்கள் என்பது உலகிற்கு தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜி20, ஆசியான் மாநாடுகளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் தீவிரவாதத்தை உற் பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது, இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். அதேபாணியில் இந்திய வெளியுறவு செயலரும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்