பாட்னாவில் குண்டு வெடித்த நாளில் பட விழாவில் பங்கேற்பு: சோனியாவிடம் ஷிண்டே விளக்கம்

By செய்திப்பிரிவு





பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அன்று மாலை மும்பையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் ஷிண்டே நடிகை கங்கணா ரணவத்துடன் பங்கேற்றார்.

அமைச்சரின் இந்த செயல்பாடு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பற்ற முறையில் திரைப்பட விழா கொண் டாட்டத்தில் பங்கேற்ற அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ஷிண்டே சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டா ரங்கள் கூறும்போது, திரைப்பட இசை விழாவில் ஷிண்டே பங்கேற்றது குறித்து சோனியாவிடம் அவர் விளக்கம் அளித்தார் என்று தெரிவித்தன.

குண்டுவெடிப்பு நடைபெற்ற பாட்னாவுக்கு ஷிண்டே நேரில் செல்லாமல் டெல்லியிலேயே தங்கிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டிகளில் நரேந்திர மோடியை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்பிடாததையும் அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்