சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை

By பிடிஐ

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி யில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ேமற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அப்போது உடனிருந்தார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் மம்தா பேசும் போது, “குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக யாருடைய பெயரை யும் நாங்கள் விவாதிக்கவில்லை. என்றாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவதன் அவசியம் குறித்து பேசினோம்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒருவரை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தேர்வுசெய்ய விரும்புகிறோம். நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய மற்றும் சிறந்த வேட்பாளராக அவர் இருக்கவேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

இது தொடர்பாக நாங்கள் ஒன்றிணைந்து பேசுவோம். இதற்காக கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம். எங்களுக்கு கால அவகாசம் இருப்பதால் மீண்டும் சந்தித்து பேசுவோம். என்றாலும் மத்திய அரசும் தனது தரப்பில், ஒருமித்த கருத்து அடிப்படையில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற் கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

5 mins ago

வலைஞர் பக்கம்

9 mins ago

சினிமா

14 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

27 mins ago

க்ரைம்

24 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்