உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 31 மாடி ஆதர்ஷ் கட்டிடத்தை கையகப்படுத்தியது ராணுவம்

By பிடிஐ

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மும்பையில் சர்ச்சைக்குரிய 31 மாடி ஆதர்ஷ் கட்டிடத்தை ராணுவம் கையகப்படுத்தியது.

கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்காக, தெற்கு மும்பையில் உள்ள கொலாபாவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதற்காக ஆதர்ஷ் வீட்டு வசதி சொசைட்டி தொடங்கப்பட்டது. ஆனால், விதிகளை மீறி 31 மாடி கட்டிடம் கட்டியதாக புகார் எழுந்தது. அத்துடன், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள், அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து 31 மாடி கட்டிடத்தை இடித்து தள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆதர்ஷ் சொசைட்டியினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆதர்ஷ் கட்டிடத்தை இடித்து தள்ளவும், முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.சலமேஸ்வர், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 22-ம் தேதி விசாரித்து, ‘‘ஆதர்ஷ் கட்டிடத்தை ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் மத்திய அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, மத்திய அரசின் சார்பில் ஆதர்ஷ் கட்டிடத்தை கையகப்படுத்தும் பணியை கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ அதிகாரிகள் தொடங்கினர். ஆதர்ஷ் கட்டிடத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கினர். இந்த நடவடிக்கை நேற்று முடிந்தது. 31 மாடி ஆதர்ஷ் கட்டிடம் முழுவதும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த பணிகள் பாம்பே உயர் நீதிமன்றம் நியமித்த பதிவாளர் முன்னிலையில் நடைபெற்றது என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதர்ஷ் ஊழல் மகாராஷ்டிராவில் பெரும் புயலை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்