டெல்லி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லியில் அரசு அமைப்பது தொடர்பான வழக்கில், மத்திய அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ராஜினாமா செய்த பிறகு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக இழுபறி நீடிப்பது ஏன் என மத்திய அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம் கூறியதாவது, "ஜனநாயக நாட்டில், ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீண்ட நாட்களாக அமலில் இருக்க முடியாது. 5 மாதங்களாகியும் துணை நிலை ஆளுநர் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாதது ஏன்?" இவ்வாறு கேள்வி எழுப்பியது.

அதற்கு மத்திய அரசு தரப்பில், "டெல்லியில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க அனுமதி கோரி துணை நிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மனுவை விசாரித்த பின்னர் தங்களது நிலையை தெரிவிக்க முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்