மத்தியப் பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ.2,000 நோட்டுகள்: அதிர்ச்சியடைந்த விவசாயி

By பிடிஐ

மத்திய பிரதேசத்தில் பொதுத்துறை வங்கியில் பணம் எடுத்த விவசாயி தான் எடுத்த ரூ.2000 நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.

பொதுத்துறை வங்கியிலிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்ற விவசாயி ஒருவர் அதில் காந்தி படம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

லஷ்மண் மீனா என்ற விவசாயி பிச்சுகாவடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஷியோபுர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் பணம் எடுக்கும் போது மூன்று ரூ.2000 நோட்டுகளைப் பெற்றார்.

“என்னிடம் மூன்று ரூ.2000 நோட்டுகள் அளிக்கப்பட்டது. நான் பிற்பாடுதான் அதில் மகாத்மா காந்திபடம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். நான் சந்தையில் இருந்த போதுதான் இதனைக் கண்டுபிடித்தேன். நான் வங்கிக்கு மீண்டும் சென்று மேலாளரிடம் இந்த நோட்டுகளைக் காண்பித்தேன்.

முதலில் மேலாளர் நோட்டுகளை வாங்கும் போதே சரிபார்த்திருக்க வேண்டும் என்றார். ஆனால் பிறகு நோட்டுகளை மீண்டும் டெபாசிட் செய்யுமாறு தெரிவித்தார்” என்றார்.

‘அச்சுப் பிழை’

நோட்டுகள் அசலானவைதான் மகாத்மா காந்தி படம் விடுபட்டது அச்சுப்பிழையாக இருக்கலாம் என்று வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து வங்கி மேலாளரை பிடிஐ தொடர்பு கொண்ட போது, இத்தகவலை மாவட்ட வங்கி மேலாளரிடம் தெரிவித்து விட்டதாக தெரிவித்தார்.

“என்னிடம் கூறுவதற்கு எதுவுமில்லை, இந்தத் தகவலை ஏற்கெனவே முன்னிலை வங்கி மேலாளரிடம் நான் சமர்ப்பித்து விட்டேன்” என்றார் வங்கி மேலாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்