வன்முறையில் ஈடுபடும் பசு பாதுகாவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை

By பிடிஐ

பசு பாதுகாப்பு என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசு மாடுகளைப் பாதுகாப்பது நமது கொள்கையின் ஒரு அங்கம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. அதேநேரம் மற்றவர்களுடைய உணவு பழக்கவழக்கத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் பசுக்களை மதிக்கிறார்கள் என்பது உண்மை.

சந்தையில் இறைச்சிக்காக பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்கவோ வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

அதேநேரம் பசு பாதுகாப்பு என்ற போர்வையில் வன் முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கெனவே கூறியுள்ளார்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

நீதித் துறையில் மறு ஆய்வு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான 7 நீதிபதிகள் அமர்வு இதுவரை இல்லாத வகை யில் இந்த உத்தரவை பிறப் பித்தது. ஆனால், அவர் தலைமறை வாக இருப்பதால் உச்ச நீதி மன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது.

இதுதொடர்பான செய்தியாளர் களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று கூறும் போது, “ஒரு குறிப்பிட்ட நீதிபதி தொடர்பான வழக்கைப் பொறுத்தவரை எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அதேநேரம் இந்த விவகாரம் நீதித் துறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

மேலும்