குழந்தை தொழிலாளர் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

By பிடிஐ

குழந்தை தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது.

14 வயதுக்கு கீழுள்ள குழந் தைகளை பணியில் அமர்த் தும் உரிமையாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் 2 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைமை) திருத்த மசோதா அண்மையில் கொண்டு வரப் பட்டது. இம்மசோதா கடந்த 19-ம் தேதி மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்களவையில் இம்மசோதா நிறைவேறியது.

இதன்படி இனி எந்த வொரு பணியிலும், 14 வயதுக்கு குறைந்த குழந்தை களை பணியில் அமர்த்த முடி யாது. பணிக்கு செல்லும் படி வற்புறுத்தும் பெற்றோர் களும் சிறையில் அடைக்கப்படு வார்கள் என்பதால், நாடு முழு வதும் குழந்தை தொழிலாளர்கள் முறை இனி ஒடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பள்ளி நேரம் முடிந்ததும் குடும்பத்துக்கு உதவியாக குழந்தைகள் தொழிலை கவனித் துக்கொள்வதற்கு இந்த மசோதாவில் தடை விதிக்கப்பட வில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்