உ.பி.யில் செல்போன் பேசும் வாகன ஓட்டுநரை படம் பிடித்தால் பரிசு

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் தினசரி சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வருவது அம்மாநில அரசை மிகவும் கவலைப்பட வைத்துள்ளது. எனவே சிறு வயது முதலே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை விதிகளை பள்ளிப் பாடப் புத்தகங் களில் சேர்க்க வேண்டும் என இருதினங்களுக்கு முன் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இந்நிலையில் சாலை விதிகளை மீறி செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டும் ஓட்டுநரை கண்டால், அதை உடனடியாக படம்பிடித்து அனுப்புவோருக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும் என மாநில அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்வதந்திரா தேவ் சிங் கூறும்போது, ‘‘வாகனம் ஓட்டிக்கொண்டே சில ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதாக பயணி களிடம் இருந்து தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சாலைவிதி களை மீறும் ஓட்டுநர்களை படம்பிடித்து வாட்ஸ் அப் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கலாம். அதன்பின் அந்த ஓட்டுநரிடம் இருந்து உரிய அபராதம் வசூலிக்கப்படும். படம் அனுப்பி வைத்தவருக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

51 mins ago

வாழ்வியல்

42 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்