ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

By செய்திப்பிரிவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி காணப்பட்டது என்று கூறிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மோடியின் வரலாற்றுப் பாடம் தவறானதாகவே இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி முதன் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்ற 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 39.49 ஆக இருந்தது.

தேர்தலுக்குப் பின்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற 1999-ம் ஆண்டு மே மாதத்தில் ரூபாயின் மதிப்பு ரூ. 42.84 ஆக வீழ்ச்சியடைந்தது. பாஜக கூட்டணி ஆட்சியின் இறுதி கால கட்டமான 2004-ம் ஆண்டு மே 21-ம் தேதி ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடைந்து ரூ. 45.33 ஆக ஆனது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஏற்கெனவே பல வரலாற்று பாடங்களை எடுத்து வருகிறார். அதில் ஒரு பாடமாக இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரத்தையும் வைத்துக் கொள்ளலாம்" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததில்லை என்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

வர்த்தக உலகம்

17 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்