குவிஸ் போட்டிகளின் முன்னோடி நீல் ஓ பிரையன் காலமானார்

By பிடிஐ

இந்தியாவில் குவிஸ் போட்டி களின் முன்னோடியும், ஆங்கிலோ இந்திய சமூகத்தின் தலைவரு மான நீல் ஓ பிரையன் நேற்று தன் 82-வது வயதில் காலமானார்.

இதனை அவர் மகனும், திரிணமூல் எம்.பி.யுமான டெரிக் ஓ பிரையன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நீல் ஓ பிரையன், தன் மனைவி ஜோய்ஸ், மூன்று மகன்கள் டெரிக், ஆண்டி, பேரி ஆகியோருடன் வசித்து வந்தார்.

கல்வியாளர், குவில் நிகழ்ச்சி களின் முன்னோடியான நீல் ஓ பிரையன், முன்னாள் மக்களவை எம்.பி. ஆவார். தவிர, மேற்குவங்க மாநிலத்தில் மூன்று முறை ஆங்கி லோ இந்திய நியமன எம்எல்ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்ஸாமினேசன்ஸ் கவுன்சிலின் (சிஐஎஸ்சிஇ) தலைவராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.

அனைத்திந்திய ஆங்கிலோ-இந்தியன் அசோசியன் தலைமை தலைவராகவும், பிராங்க் அந்தோனி குழும பள்ளிகளின் தலைவராகவும் அவர் இருந்து வந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

தமிழகம்

9 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்