மதுரா கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம்: ஹேமமாலினி

By பிடிஐ

மதுராவில் நடந்த கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம் என அத்தொகுதி எம்.பி. ஹேமமாலினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி, "மதுரா சம்பவம் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. போலீஸ்காரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக உ.பி. மாநில அரசு இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது ஏன்?

நடந்த சம்பவத்துக்கு உத்தரப் பிரதேச அரசின் அலட்சியமே காரணம். முதல்வர் அகிலேஷ் யாதவிடம் நான் கேள்வி எழுப்புவேன். மதுரா சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும் எழுதவிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

சினிமா

3 mins ago

தமிழகம்

25 mins ago

க்ரைம்

41 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்